ஓடிடியில் 'அவெஞ்சர்ஸ்' நடிகையின் 'ஹிஸ் திரீ டாட்டர்ஸ்' - வைரலாகும் டிரெய்லர்
நடிகை எலிசபெத் ஓல்சன் 'ஹிஸ் திரீ டாட்டர்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்;
வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் நடிகை எலிசபெத் ஓல்சன். இவர் மார்த்தா மார்சி மே மார்லின் (2011), சைலண்ட் ஹவுஸ் (2011), லிபரல் ஆர்ட்ஸ் (2012), ஓல்ட் பாய் (2013), காட்சில்லா (2014) போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, வாண்டா மாக்சிமோப் / ஸ்கார்லெட் விட்ச் போன்ற கதாபாத்திரத்தில் அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆப் அல்ட்ரான் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். 2021ஆம் ஆண்டு வாண்டாவிஷன் என்ற டிஸ்னி பிளஸ் இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நடிகை எலிசபெத் ஓல்சன் 'ஹிஸ் திரீ டாட்டர்ஸ்' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் அசாசல் ஜேக்கப்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் கேரி கூன், நடாஷா லியோன் மற்றும் எலிசபெத் ஓல்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும், இதில் இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 20ம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.