நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பாலிவுட் நடிகையின் ஹாரர் படம்
அவிகா கோர் நடித்துள்ள 'பிளடி இஷ்க்' படம் ஓடிடியில் வெளியாக உள்ளது.;
சென்னை,
பிரபல பாலிவுட் நடிகை அவிகா கோர். இவர், 2008-ம் ஆண்டு வெளியான பாலிகா வது என்ற இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். அதில் ஆனந்தி வேடத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தற்போது இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான 'வதுவு' ஓடிடியில் வெளியானது. தற்போது ஹாரர் படமாக உருவாகும் 'பிளடி இஷ்க்' படத்தில் அவிகா கோர் நடித்துள்ளார். விக்ரம் பட் இயக்கும் இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டு வரும் 26-ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இப்படம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.
பிளடி இஷ்க் படத்தில் வர்தன் பூரி, ஜெனிபர் பிசினாடோ மற்றும் ஷியாம் கிஷோர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹவுஸ்புல் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹரே கிருஷ்ணா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஷமிர் டாண்டன் மற்றும் பிரதீக் வாலியா இசையமைத்துள்ளனர்.