ஓ.டி.டியில் பார்க்க வேண்டிய 7 சிறந்த தென்னிந்திய திரைப்படங்கள்

ஓ.டி.டியில் உள்ள எல்லா காலத்திலும் சிறந்த 7 தென்னிந்திய திரைப்படங்கள்.

Update: 2024-08-20 11:07 GMT

சென்னை,

திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, தற்போது வந்த மகாராஜா முதல் பழைய படங்கள் வரை ஓ.டி.டியில் பார்க்க வேண்டிய எல்லா காலத்திலும் சிறந்த 7 தென்னிந்திய திரைப்படங்களை தற்போது காணலாம்.

7. ரங்கஸ்தலம்

ராம் சரண், சமந்தா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் 'ரங்கஸ்தலம்'. சுகுமார் இயக்கிய இப்படம் தெலுங்கில், அந்த ஆண்டு வெளியாகி அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படமாகும். தற்போது இப்படத்தை பிரைம் வீடியோ மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் காணலாம்.

6. காந்தாரா

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த படம் 'காந்தாரா'. கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இப்படம் சமீபத்தில் தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படத்தை தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவில் காணலாம்

5. திரிஷ்யம்

ஜித்து ஜோசப் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'திரிஷ்யம்'. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, பல மொழிகளில் ரீமேக் ஆகி அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படம் தற்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் உள்ளது.

4. கும்பளங்கி நைட்ஸ்

சவுபின் ஷாஹிர், ஷான் நிகம், பகத் பாசில் மற்றும் ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான படம் 'கும்பளங்கி நைட்ஸ்'. நாராயணன் இயக்கிய இப்படத்தை தற்போது பிரைம் வீடியோவில் காணலாம்.

3. மகாராஜா

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான படம் 'மகாராஜா'. விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் நடித்திருந்த இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ளது.

2. நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில் 1987-ம் ஆண்டு வெளியான படம் 'நாயகன்'. கமல்ஹாசன், சரண்யா பொன்வண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான இப்படம் பிரைம் வீடியோவில் உள்ளது.

1. கேர் ஆப் காஞ்சரபாலம்

வெங்கடேஷ் மகா இயக்கத்தில் கடந்த 2018ம் அண்டு வெளியான படம் 'கேர் ஆப் காஞ்சரபாலம்'. கார்த்திக் ரத்னம், பிரவீனா பருசுரி, ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் ரூ. 70 லட்சம் பட்ஜெட்டில் உருவானது. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோவில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்