ஒரே நாளில் ஓ.டி.டி.யில் வெளியாகும் 4 படங்கள்

வருகிற அக்டோபர் 11-ந் தேதி ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்கள் குறித்த ஒரு பார்வை.;

Update: 2024-10-08 10:23 GMT

சென்னை,

திரையரங்குகளில் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளது. ஆனாலும், ஓ.டி.டி.யில் வெளியாகும் படங்களைப் பார்ப்பதற்க்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், வருகிற அக்டோபர் 11-ந் தேதி எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

1. வாழை : தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'வாழை' படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். அதில் வாழை தார் ஏற்றி செல்லும் லாரி கவிழ்ந்து அதன் மேல் பயணம் செய்த 19 பேர் உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டிருக்கிறது. இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

2. சர்பிரா : நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப்போற்று' படத்தின் இந்தி ரீமேக் படம் 'சர்பிரா'. இந்தியாவில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் வானூர்தி சேவை கிடைக்க வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இதில் அக்சய் குமார் கதாநாயகனாகவும், ராதா மதன் கதாநாயகியாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

3. லாந்தர் : 'ராட்சசன்' பட இயக்குனர் ராம்குமாரின் உதவி இயக்குனரான சாஜி சலீம் இயக்கியுள்ள படம் 'லாந்தர்'. இந்த படத்தில் நடிகர் விதார்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவாகி உள்ளது. இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

4. படிக்காத பக்கங்கள் : செல்வம் மாதப்பன் இயக்கத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ள திரைப்படம் 'படிக்காத பக்கங்கள்'. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பவுர்ணமி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்