நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய தீபிகா படுகோன் கணவர்
தீபிகா படுகோன் கணவரும் பிரபல நடிகருமான ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.;
மும்பை
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், இவரது மனைவி தீபிகா படுகோன் ரன்வீர் சிங்கின் டிரஸ்ஸிங் ஸ்டைலும் தோற்றமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவான் ஆல்ரவுண்டருமான கபில்தேவ் 83 படத்தில் நடித்து இருந்தார். விரைவில் அவரது நடிப்பில் சர்க்கஸ், ராக்கி அவுர் ராணி கா பிரேம் கஹானி ஆகியவை வெளியாக உள்ளன.
தற்போது ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தை உலுக்கி வருகின்றன. சமீபத்தில், அவர் பத்திரிக்கை ஒன்றுக்காக போட்டோ ஷூட்டுக்கு போஸ் கொடுத்தார். அதில் தனது உடம்பில் ஒட்டு துணியும் இல்லாமல் நிர்வாணமாக போஸ் கொடுத்து உள்ளார்.
இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளார். அவர் பெண்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதுபோன்ற புகைப்படங்களால் இளைஞர்கள் கெட்டுப் போவதாக கூறப்படுகிறது. இதைத்தான் ரன்வீர் செய்கிறார்.. பாலிவுட்டை விட்டு வெளியேறும் நேரம் வந்து விட்டது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்த ரன்வீர் சிங் . எல்லோர் முன்னிலையிலும் நிர்வாணப் படங்களுக்கு போஸ் கொடுப்பது எனக்கு ஒன்றும் கடினம் அல்ல. இந்த புகைப்படங்களில் எனது ஆன்மாவை பார்க்க முடியும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட நிர்வாணமாக இருக்க முடியும். ஆனால், சங்கடப்பட்டால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
ரன்வீரின் நிர்வாண புகைப்படங்களுக்கு தீபிகா படுகோன் எப்படி பதிலளிப்பார் என்று நெட்டிசன்கள் ஆவலுடன் காத்து உள்ளனர்.