தனுஷ் அனுமதி தரமறுத்த வீடியோவை பகிர்ந்த விக்னேஷ் சிவன்

தனுஷ் அனுமதி தரமறுத்த ரூ.10 கோடி மதிப்பிலான வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

Update: 2024-11-16 11:28 GMT

சென்னை,

நடிகை நயன்தாராவின் சிறுவயது வாழ்க்கை முதல் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்களை தொகுத்து ஒரு ஆவணப்படம் தயாராகி உள்ளது. 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படம் வருகிற 18-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த நானும் ரௌடிதான் படத்தின் காட்சிகள் இடம்பெற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான டிரெய்லரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் ரூ.10 கோடி கேட்டு லீகல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகர் தனுஷ் . நானும் ரௌடிதான் பட பாடல்களை புகைப்படத்தினை உபயோகிக்க தனுஷ் மறுத்துள்ளார். நடிகை நயன்தாரா தனுஷ் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்ஸ்டாகிராமில் பதிவினை வெளியிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன் இன்ஸ்டாவில் தனுஷ் குறித்து பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், "நெட்பிளிக்ஸில் பயன்படுத்தியதுக்கு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய வீடியோவை இலவசமாக பாருங்கள். அன்பைப் பகிருங்கள்" எனக் கூறி பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்