5 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'விடாமுயற்சி' படத்தின் 'சவதீகா' பாடல்

மகிழ் திருமேனி இயக்கியுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாகிறது.

Update: 2024-12-29 14:20 GMT

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலானது.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'சவதீகா' என்ற லிரிக்கல் வீடியோ பாடல் சமீபத்தில் வெளியானது. இப்பாடலை அனிருத் மற்றும் அந்தோணிதாசன் இணைந்து பாடியுள்ளனர். இந்த நிலையில் இப்பாடல் யூடியூப் தளத்தில் தற்போது வரை 50 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மேலும் யூடியூப்பில் டிரெண்டிங்கில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. 

'சவதீகா' என்றால், தாய்லாந்து மொழியில் "வணக்கம்" என்று அர்த்தமாம். தாய்லாந்து மொழி பேசும் பெண்கள், பிறரிடம் தன்மையாக வணக்கம் சொல்வதற்கு உபயோகிக்கும் வார்த்தைதான், இந்த 'சவதீகா' என்ற வார்த்தைக்கான அர்த்தமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்