அனுஷ்கா நடித்துள்ள 'காதி' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு

அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள 'காதி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் பான் இந்தியா அளவில் வெளியாக உள்ளது.;

Update: 2025-01-01 10:10 GMT

சென்னை,

'அருந்ததி' என்ற பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி'. தற்போது இவர் கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கத்தில் தனது 50-வது படமான "காதி" என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து 2010 ஆம் ஆண்டு 'வேதம்' என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. காதி பான் இந்தியா திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி வெளியாக உள்ளது. அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்