நிவின் பாலி - நயன்தாரா நடித்த 'டியர் ஸ்டூண்ட்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் 'டியர் ஸ்டூண்ட்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.;

Update: 2025-01-03 16:09 GMT

கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'லவ் ஆக்சன் ட்ராமா'. இந்தப் படத்தில் நிவின் பாலி, நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் புதிய படம் ஒன்றுக்காக இணைந்துள்ளனர். சந்தீப் குமார், ஜார்ஜ் பிலிப் ராய் ஆகியோர் இணைந்து இப்படத்தை இயக்குகின்றனர்.

நிவின் பாலி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் நயன்தாரா இணைந்துள்ளதை வீடியோ வெளியிட்டு படக்குழு தெரிவித்துள்ளது. படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'டியர் ஸ்டூண்ட்ஸ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் பள்ளிக்கூடத்தில் நடக்கும் கதையை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது.

முன்பு 'பிரேமம்' கல்லூரி காதல் கதையை அடிப்படையாக கொண்டு நிவின் பாலி - சாய் பல்லவி நடிப்பில் உருவானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்