மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் பிரபு
நடிகர் பிரபு கடந்த 3-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.;
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பிரபு. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அஜித் நடிப்பில் வெளியாக உள்ள 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இவருடைய மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், இவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 3-ந் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் போது நடிகர் பிரபுவின் மூளையில் வீக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, நடிகர் பிரபுவுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. சிகிச்சை முடிந்ததும் அவரது உடல்நிலை சீரானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நடிகர் பிரபு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளார்.