கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதி அறிவிப்பு

புத்தாண்டை முன்னிட்டு கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.;

Update: 2025-01-01 05:42 GMT

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முண்ணனி நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் ஆர்.ஆர்.ஆர் பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'கேம் சேஞ்சர்' படத்தில் நடித்துள்ளார். இதில், இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.

இப்படம் பொங்கல் வெளியீடாக அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. தற்போது இப்படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தசூழலில், புத்தாண்டை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேம் சேஞ்சர் படத்தின் டிரெய்லர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இந்த டிரெய்லர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்