ஜனவரி 2-ம் தேதியை காலண்டரில் குறித்து கொள்ளுங்கள் - பிரபல தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்

'தளபதி 69 மற்றும் டாக்ஸிக்' படத்தை தயாரித்து வரும் பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.;

Update: 2025-01-01 12:32 GMT

பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தற்போது விஜய்யின் 69-வது படத்தை தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு தளபதி 69 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. இந்த படம் கே.வி.என் நிறுவனத்தின் முதல் தமிழ் படமாகும்.

அதனை தொடர்ந்து, கேஜிஎப் நடிகர் யாஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' படத்தையும் தயாரித்து வருகிறது. டாக்ஸிக் படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார். கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, நயன்தாரா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த தயாரிப்பு நிறுவனம், தனது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, "2025-ம் ஆண்டுக்கான மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்து கொண்டிருக்கிறது. அதனால் உங்கள் காலண்டரில் ஜனவரி 2-ந் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்" என்று அதில் தெரிவித்துள்ளது. எனவே ரசிகர்கள் பலரும் இது தளபதி 69 பட அப்டேட்டா? அல்லது டாக்ஸிக் படத்தின் அப்டேட்டா? என்று சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர். இது குறித்த அறிவிப்பு நாளை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலில் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்