ஓடிடியில் வெளியான அமீரின் 'உயிர் தமிழுக்கு'

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'.;

Update: 2024-06-25 13:31 GMT

சென்னை,

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'உயிர் தமிழுக்கு'. இப்படத்தை மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கினார்.

இப்படத்தில் சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

வித்யாசாகர் இசையமைத்த இந்த படத்துக்கு தேவராஜ் ஒளிப்பதிவு செய்தார். இப்படம் கடந்த மாதம் 10-ம் தேதி வெளியானது. மக்களிடையே கலவையான விமர்சனங்களை இப்படம் பெற்றது.

இந்நிலையில், ஓடிடியில் வெளியாகி உள்ளது. அதன்படி, ஆஹா ஓடிடி தளத்தில் 'உயிர் தமிழுக்கு' படம் இன்று வெளியாகி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்