கசிந்த குளியலறை வீடியோ...விளக்கம் கொடுத்த 'லெஜண்ட்' பட நடிகை
சில நாட்களுக்கு முன்பு இவரின் குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகியது.;
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா. இவர், 'சிங் சாப் தி கிரேட்' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 'லெஜண்ட்' படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஊர்வசி ரவுத்தேலா. தெலுங்கு, இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார்.
கிக், ரேஸ் குர்ரம், கிக்-2, துருவா, சைரா உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஏஜென்ட் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார் ஊர்வசி ரவுத்தேலா. தற்போது, சுசி கணேசன் இயக்கத்தில் 'குஸ்பைதியே' படத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்பு இவரின் குளியலறை வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்து வைரலாகியது. இது குறித்து எந்த விளக்கமும் தெரிவிக்காமல் மவுனம்காத்துவந்த ஊர்வசி ரவுத்தேலா தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"இந்த வீடியோவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். நிச்சயமாக இது எனது தனிப்பட்ட வீடியோ கிடையாது, இது நான் நடிக்கும் 'குஸ்பைதியே' படத்தின் ஒரு பகுதி. இதற்கு முன்பு இதுபோன்ற என் வீடியோ வெளியானது கிடையாது. எந்தப் பெண்ணும் இதுபோன்ற ஒன்றைச் செய்யக்கூடாது என்று நான் விரும்புகிறேன்" என்றார்.