வெற்றிமாறன் இயக்கும் 'வாடிவாசல்' படத்தின் அப்டேட்

தயாரிப்பாளர் தாணு 'வாடிவாசல்' திரைப்படம் குறித்து புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.

Update: 2024-12-28 13:15 GMT

சென்னை,

தனுஷ் நடிப்பில் 2007-ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை, விடுதலை 2 உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி உள்ளார்.

இதற்கிடையில் இயக்குனர் வெற்றி மாறன் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமால் தாமதமாகி கொண்ட போனது. தற்போது நடிகர் சூர்யா ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது 'வாடிவாசல்' படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு, "வாடிவாசல் படத்திற்கான வேலைகள் துவங்கியுள்ளன. படத்திற்காக லண்டனில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனிமேஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. இனி நடக்க வேண்டியது நடக்கும்" எனக் கூறியுள்ளார்.

இதன் மூலம் விரைவில் படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்