அல்லு அர்ஜுனுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்த 'புஷ்பா 2' பட நடிகை
அல்லு அர்ஜுனுடன் பணிபுரிந்த அனுபவத்தை நடிகை அஞ்சல் முன்ஜல் பகிர்ந்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 5-ம் தேதி வெளியான படம் புஷ்பா2 . அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் நடித்திருந்த இப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனைபடைத்து வருகிறது. அதன்படி, இப்படம் இதுவரை ரூ. 1,705 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது.
புஷ்பா 2 படத்தில் ஹேங்ஸ்டர் ஹமீதாக நடித்திருந்த சவுரப் சச்தேவின் காதலியாக நடித்திருந்தவர் அஞ்சல் முன்ஜல். இவர் தற்போது அல்லு அர்ஜுனுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'அல்லு அர்ஜுன் புஷ்பா கதாபாத்திரத்தில் முழுமையாக மூழ்கிவிட்டார். முதல் இரண்டு நாட்கள் அது அல்லு அர்ஜுனா அல்லது புஷ்பாவா என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
படப்பிடிப்பில் யாருடனும் அவர் புகைப்படம் எடுப்பதில்லை. ஆனால், கடைசி நாளில் நான் புகைப்படம் எடுக்க கேட்டேன். 30 வினாடிகள் சிந்தித்து, பின்னர் ஆம் என்றார். அவருடன் புகைப்படம் எடுத்ததால் யாரும் பொறாமைப்பட வேண்டாம்' என்றார்.