'அவரைப்போல தெளிவு யாருக்கும் கிடையாது' - நடிகர் கிச்சா சுதீப்

நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த கிச்சா சுதீப், தற்போது 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.

Update: 2024-12-29 02:27 GMT

சென்னை,

கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் கிச்சா சுதீப். 'நான் ஈ', 'புலி' ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர், தற்போது ஆக்சன் திரில்லர் படமாக 'மேக்ஸ்' படத்தில் நடித்துள்ளார்.

விஜய் கார்த்திகேயா இயக்கிய இப்படம் கடந்த 25-ம் தேதி கன்னடம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

முன்னதாக இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கிச்சா சுதீப், நடிகர் விஜய்யை பாராட்டினார். இது குறித்து அவர் கூறுகையில்,

'விஜய் சார் பெரிய கனவு காண்பவர். அதிக கவனம் செலுத்துபவர். அவரைப் போல தெளிவு யாருக்கும் கிடையாது. என்ன செய்ய வேண்டும், எப்போது செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். அதை அவர் மிகவும் துல்லியமாக செய்வார்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்