'கூலி' படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துவிட்டது - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் சவுபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படம் 2025 மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த், விமானம் மூலம் சென்னை திரும்பி வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த அவரிடம், 'கூலி' திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "70 சதவீதம் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக" தெரிவித்தார்.
மேலும் அவரிடம், "விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் உள்பட பல கேள்விகள் கேட்டபோது, அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் "தேங்க்யூ" என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார்.