திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகை திரிஷா

சினிமாவில் கதாநாயகியாக 22 ஆண்டுகளை கடந்த நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Update: 2024-12-13 09:22 GMT

சென்னை,

அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த 'மௌனம் பேசியதே' திரைப்படம் கடந்த 2002-ம் ஆண்டு வெளியானது. இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் இந்த திரைப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகியுள்ளது.

'ஜோடி' உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்த நடிகை திரிஷா, இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து 'சாமி', 'கில்லி', 'ஆறு' உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.


அண்மையில் வெளியான 'பொன்னியின் செல்வன்', 'லியோ' உள்ளிட்ட படங்களிலும் திரிஷாவின் நடிப்பு பாராட்டைப் பெற்றது. கதாநாயகியாக அறிமுகமாகி 22 ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை, தமிழில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்ததற்கு பெருமைப்படுவதாக நடிகை திரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை திரிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்