சிறப்பு போஸ்டர் வெளியிட்ட 'புஷ்பா 2' படக்குழு

சிறப்பு போஸ்டர் வெளியிட்டு ‘புஷ்பா 2’ படக்குழு ‘தீபாவளி’ வாழ்த்து தெரிவித்துள்ளது.

Update: 2024-10-31 10:42 GMT

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ் . இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக . 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகி வருகிறது.

'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து படத்தின் பாடல்களின் லிரிக் வீடியோவும் வெளியாகி வைரலாகின. இப்படம் வருகிற டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் ரிலீஸ் தேதியை மாற்றி டிசம்பர் 5ம் தேதியே உலகளவில் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்தது.

இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்நிலையில், இப்படத்தின் படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்