'மகாராஜா' படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோவை பகிர்ந்த இயக்குனர்

விஜய் சேதுபதி நடித்துள்ள 'மகாராஜா' படத்தின் படப்பிடிப்பின்போது எடுத்த வீடியோவை இயக்குனர் பகிர்ந்துள்ளார்.;

Update:2024-06-15 13:04 IST

சென்னை,

விஜய் சேதுபதி தனது 50-வது படமான 'மகாராஜா' படத்தில் நடித்துள்ளார். இதனை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர். சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.

'மகாராஜா' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் நிதிலன் சாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனுடன் ' ஒரு வருடத்திற்கு முன்பு மகாராஜா படப்பிடிப்பின்போது' என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று மகாராஜா படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், நடிகர் விஜய் சேதுபதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்தார். இது குறித்தான வீடியோ வெளியாகி வைரலானது.

Tags:    

மேலும் செய்திகள்