'ஸ்குவிட் கேம்' 3ம் பாகம் அப்டேட் கொடுத்த இயக்குனர்!

ஸ்குவிட் கேம் 2-ம் பாகம் வருகிற 26-ந் தேதி வெளியாக உள்ளது.

Update: 2024-12-14 03:49 GMT

கடந்த 2021-ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் 'ஸ்குவிட் கேம்'. 9 எபிசோடுகளை கொண்ட இந்தத் தொடரை பிரபல இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் இயக்கி இருந்தார். இந்த தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தொடராகவும் இந்த தொடர் உள்ளது. இதனையடுத்து இந்தத் தொடரின் அடுத்த சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

அதன்படி, தற்போது இந்தத் தொடரின் 2-வது பாகம் உருவாகி உள்ளதுது. மேலும், வரும் டிசம்பர் மாதம் 26-ம் தேதி இந்த தொடர் வெளியாகும் எனவும் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சமீபத்தில் 2-வது பாகத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது, 'ஸ்குவிட் கேம்' 3-ம் பாகம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, பிரபல தென்கொரிய வெப் தொடரான 'ஸ்குவிட் கேம்' 3-ம் பாகத்துடன் நிறைவடைய உள்ளதாக இயக்குனர் ஹ்வாங் டாங் - ஹியூக் தெரிவித்துள்ளார். இந்த பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டே 3-ம் பாகம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்