அமலாக்கத்துறை விசாரணைக்கு மத்தியில் பிரபல கோவிலில் பெற்றோருடன் சாமி தரிசனம் செய்த தமன்னா

நடிகை தமன்னா தனது பெற்றோருடன் காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.;

Update: 2024-10-20 01:50 GMT

கவுகாத்தி,

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தமன்னா. இவர் பேர்பிளே என்ற செயலிக்கான விளம்பரத்தில் நடித்திருந்தார். பேர்பிளே என்பது மகாதேவ் ஆன்லைன் கேமிங் செயலியின் துணை செயலியாகும். இது கிரிக்கெட் போன்ற பல்வேறு நேரடி விளையாட்டுகளில் சட்டவிரோதமாக பெட்டிங் செய்வதற்கான செயலியாகும். இந்த செயலி மீது கடந்தாண்டு பண மோசடி வழக்குப் பதியப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை ஓராண்டாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜரான தமன்னாவிடம் அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணை விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இந்நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்கு மத்தியில் நடிகை தமன்னா தனது பெற்றோருடன் அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் உள்ள பிரபல காமாக்யா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது, தமன்னா 'ஓடேலா 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்