இவானா, கெட்டிகா நடிக்கும் 'சிங்கிள்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
கெட்டிகா ஷர்மா மற்றும் இவானா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வரும் படம் ’சிங்கிள்’;

சென்னை,
நடிகர் ஸ்ரீ விஷ்ணு மற்றும் இளம் நடிகைகளான கெட்டிகா ஷர்மா மற்றும் இவானா ஆகியோர் நடித்து வரும் யூத் புல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் 'சிங்கிள்'. இப்படத்தை கார்த்திக் ராஜு இயக்க, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் வழங்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி இருக்கிறது. அதன்படி, இப்படத்தை கோடை விருந்தாக மே மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கிள் படத்தை கல்யா பிலிம்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினிடி, பானு பிரதாபா மற்றும் ரியாஸ் சௌதர் ஆகியோர் தயாரிக்கின்றனர். சீதாராமம் புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.