பிரபல சின்னத்திரை நடிகர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து வந்தவர் நடிகர் நேத்ரன்.

Update: 2024-12-04 01:24 GMT

சென்னை,

சின்னத்திரையில் பல ஆண்டுகளாக நடித்து வந்தவர் நடிகர் நேத்ரன் (47). மருதாணி சீரியல் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கிய இவர், சூப்பர் குடும்பம், முள்ளும் மலரும், வள்ளி, சதிலீலாவதி, உறவுகள் சங்கமம், பாவம் கணேசன் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

இந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நேத்ரனுக்கு புற்றுநோய் இருப்பது உறுதியாகி அதற்காக அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகர் நேத்ரன் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு சின்னத்திரை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏறக்குறைய 25 வருடங்கள் சின்னத்திரையில், பிரபல நடிகராக வலம் வந்தவர் நேத்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்