பவன் கல்யாணுக்கு கொலை மிரட்டல்

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-09 14:55 GMT

தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்-மந்திரியாக இருப்பவர் தான் பவன் கல்யாண். இந்த ஆண்டு நடந்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி பெரும் வெற்றி பெற்றது.

இவர் தற்போது 'ஹரி ஹர வீர மல்லு' என்ற படத்தில் நடித்து வருகிறார். கிரிஷ் ஜாகர்லமுடி இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 28-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஆந்திர துணை முதல்-மந்திரியும் நடிகருமான பவன் கல்யாணுக்கு தொலைபேசி மூலம் மர்ம நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்