கேரள சினிமாவை ஆட்டிப்படைக்கும் பாலியல் விவகாரம்: மோகன்லால் ராஜினாமா

மலையாள திரைப்பட நடிகர் சங்கத்திலிருந்து தலைவர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

Update: 2024-08-27 10:13 GMT

மலையாள சினிமாவில் பெண்கள் எதிர்கொண்ட பாலியல் தொல்லைகள் குறித்த நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த அறிக்கை வெளியானதற்கு பின் பல நடிகைகள் தாங்களும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக கூறி வருகின்றனர்.

நடிகர்கள், ஜெயசூர்யா சித்திக், ரியாஸ் கான் உட்பட பலர் மீதும் புகார்கள் கூறப்பட்டுள்ளன. வங்க மொழி நடிகை ஸ்ரீலேகா மித்ரா, மலையாள சினிமா அகாடமி தலைவருமான ரஞ்சித் மீது பாலியல் புகார் கூறியுள்ளார்.நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டினார்.

இந்த புகார்களை தொடர்ந்து ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மலையாள நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியை சித்திக் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் மோகன்லாலுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்த நிலையில் மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கமான 'அம்மா' அமைப்பின் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். மேலும் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்