சினிமாவில் நான் யாரையும் போட்டியாக நினைத்தது இல்லை - பூஜிதா பொன்னாடா

பிகினி உடை எனக்கு செட் ஆகாது என்று நடிகை பூஜிதா பொன்னாடா கூறியுள்ளார்.;

Update:2024-07-25 11:40 IST

சென்னை,

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் பூஜிதா பொன்னாடா, தமிழில் `7', `பகவான்' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். விசாகப்பட்டினத்தில் பிறந்த பூஜிதா, பார்த்தால் ஆந்திரா மிளகாய் போல காரமானவர் என்று தோன்றலாம். ஆனால் பேசுவதிலும், பழகுவதிலும் மதுரை ஜிகர்தண்டா போல குளுமையானவர். தற்போது தமிழில் பல படங்கள் நடித்து வரும் பூஜிதா, `தினத்தந்தி' நட்சத்திர பேட்டிக்கு அளித்த சிறப்பு நேர்காணல் வருமாறு:-

சினிமாவுக்கு வந்ததை பற்றி...

திட்டமிட்டு சினிமாவுக்கு வரவில்லை. என்ஜினீயரிங் படித்துவிட்டு சாப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தேன். அந்தசமயம் பொழுதுபோக்குக்காக நான் நடித்த சில குறும்படங்கள் (ஷார்ட் பிலிம்) அனைவரையும் கவனம் ஈர்த்தது. அவை பெரிய `ஹிட்' ஆனதால், விளம்பரங்கள், படங்களில் நடிக்க அழைப்பு வந்தது.

வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு எது?

எனது சிறிய வயதில் சென்னை தியாகராயநகரில் பெரிய ஹீரோக்களின் விளம்பர பதாகைகள் இருப்பதைக் கண்டு வியந்து போயிருக்கிறேன். ஆனால் ஒருகட்டத்தில் அந்த பேனரில் எனது படமும் வரும் என்று கற்பனை செய்து கூட பார்த்தது இல்லை. நிறைய துணிக்கடை, நகைக்கடை ஷோரூம்களில் இப்போதும் என் புகைப்படம் இருக்கிறது.

நடிகைக்கு கவர்ச்சி அவசியமா? நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?

அது கதையை பொறுத்தது. அதேவேளை எனக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் கிடையாது. ரசிக்கும்படியான கவர்ச்சி இருக்குமே தவிர, முகம் சுளிக்கும்படி நடிக்க மாட்டேன்.

மனமுடைந்த விமர்சனம் இருக்கிறதா?

சினிமாவில் போட்டி இருக்கிறது. ஆனாலும் நான் யாரையும் போட்டியாக நினைத்தது இல்லை. வீட்டிலும் எனக்கு அழுத்தம் தந்தது கிடையாது. எனவே விமர்சனம் வரும் அளவுக்கு நான் இல்லை. ரொம்ப கூலாக இருக்கிறேன்.

பிகினி அணிவதில் விருப்பம் உண்டா?

அந்த உடை எனக்கு செட் ஆகாது. ஆடை விஷயத்தில் ரொம்ப கவனமாக இருப்பேன்.

வாய்ப்பு வந்தால் அரசியலில் குதிப்பீர்களா?

யோசிக்கிறேன்.

கடவுள் நேரில் வந்தால் கேட்கும் வரம்?

என்ன சாப்பிட்டாலும் குண்டாகக் கூடாது என்ற வரத்தை கேட்பேன். உணவை ரசித்து ருசித்து சாப்பிடும் ஆள் நான்.

இப்படி முடித்தார் பூஜிதா பொன்னாடா.

Tags:    

மேலும் செய்திகள்