'ககன மார்கன்' : விஜய் ஆண்டனிக்கு வில்லனாக களமிறங்கும் அக்கா மகன்

விஜய் ஆண்டனி நடித்துள்ள ககன மார்கன் படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார்.;

Update: 2024-11-24 04:24 GMT

சென்னை,

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் இசையமைப்பாளராக திரைத்துறையில் நுழைந்தவர். பின்னர் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு "சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன்" உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். தற்போது தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'ஹிட்லர்' எனும் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது.

தற்போது விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தை 'அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்' உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்குகிறார். இந்த படத்திற்கு 'ககன மார்கன்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தினை விஜய் ஆண்டனி தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீப்ஷிகா, கலக்கப்போவது யாரு புகழ் அர்ச்சனா, கனிமொழி, அந்தகாரம் நட்ராஜன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கும் அஜய் தீஷன் இப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி உள்ளார். இவர் விஜய் ஆண்டனியின் அக்காவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த புது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்