இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படங்கள்
இந்த ஆண்டு பல ஹாலிவுட் படங்கள் வெளியாக இருக்கின்றன.;
சென்னை,
இந்த ஆண்டு ஹாலிவுட் ரசிகர்களுக்கு விருந்து என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு பல படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருக்கின்றன. அதன்படி, 2025-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படங்களை தற்போது காண்போம்.
1. 'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்'
கிறிஸ் எவான்சின் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் 'கேப்டன் அமெரிக்கா'. இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து அடுத்தடுத்து பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இதில், கேப்டன் அமெரிக்காவாக நடித்திருந்த கிறிஸ் எவான்சின் ஒப்பந்தம் 2019 ஆண்டோடு முடிவடைந்தது.
இதனால்,கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படத்தில் கேப்டன் அமெரிக்காவாக நடித்திருந்த கிறிஸ் எவான்ஸ் தன்னுடைய பொறுப்பை (பால்கன்) ஆண்டனி மெக்கீயிடம் ஒப்படைத்திருப்பார்.
அதன்பிறகு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான 'பால்கன் அண்ட் தி வின்டர் சோல்ஜர்' வெப் தொடரில் கேப்டன் அமெரிக்காவாக ஆண்டனி மெக்கீ நடித்து அறிமுகமானார். தற்போது இதனை வைத்து கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்' என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் பிப்ரவரி 14-ந் தேதி வெளியாக உள்ளது.
2. 'தண்டர்போல்ட்ஸ்'
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அடுத்ததாக உருவாகி வரும் படம் 'தண்டர்போல்ட்ஸ்'. இது எம்.சி.யுவின் 36-வது படமாகும். இதை பிரபல இயக்குனர் ஜேக் ஷ்ரேயர் இயக்க எரிக் பியர்சன் கதை எழுதி உள்ளார். இவர் பிளாக் விடோ, தோர்:ரக்னராக் உள்ளிட்ட படங்களுக்கு கதை எழுதி பிரபலமானவர்.
'தண்டர்போல்ட்ஸ்' படத்தில், லூயிஸ் புல்மேன், ஜெரால்டின் விஸ்வநாதன், ஹாரிசன் போர்டு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் 'பிளாக் விடோ' படத்தில் நடித்திருந்த புளோரன்ஸ் பக் மற்றும் டேவிட் கார்பரும் நடிக்கின்றனர். இப்படம் மே மாதம் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
3.'மிஷன்: இம்பாசிபிள்' 8
ஹாலிவுட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் 'மிஷன்: இம்பாசிபிள்' படங்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும். ஆக்சன் ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும் இந்தப் படத்தின் முந்தைய பாகங்கள் ஹாலிவுட்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. அதுவும் டாம் குரூஸ் நடிப்பு மற்றும் ஸ்டண்ட் காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம்.
சீக்ரட் ஏஜண்டாக டாம் குரூஸ் நடித்து 1996-ம் ஆண்டு முதன் முதலில் மிஷன் இம்பாசிபிள் படம் வெளியானது. முதல்பாகம் பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து 7-பாகங்கள் வெளியாகின. இவை அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றன. கடந்த ஆண்டு ஜூலை இந்த சீரிஸின் 7 பாகம் வெளியானது.
தற்போது இதன் 8-ம் பாகம் உருவாகி வருகிறது. மே 23-ம் தேதி இப்படம் வெளியாகி உள்ளது.
4. 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்'
பிரபல ஹாலிவுட் இயக்குனரும், எழுத்தாளருமானவர் டேவிட் கோப். இவர் கடந்த 1993-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற "ஜுராசிக் பார்க்" மற்றும் அதன் தொடர்ச்சியாக 1997-ம் ஆண்டு வெளியான "ஜுராசிக் பார்க்: தி லாஸ்ட் வேர்ல்ட்" ஆகிய படங்களில் எழுத்தாளராக பணிபுரிந்திருக்கிறார்.
தற்போது இவர் 'ஜுராசிக் வேர்ல்ட் 4' படத்திற்கு கதை எழுதியுள்ளார். இப்படத்தை காட்ஜில்லா, ராக் ஆன், தி கிரியேட்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரேத் எட்வர்ட்ஸ் இயக்குகிறார். யுனிவர்சல் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜோனதன் பெய்லி, ஸ்கார்லெட் ஜொஹான்ஸ்சன், மானுவல் கார்சியா, மஹெர்ஷாலா அலி, லூனா பிளேஸ், டேவிட் ஐகோனோ ஆகியோர் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தில் டையரா பிரம் டெட்ராய்ட், பிஎம்எப், பிளாக் சம்மர் உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான பெச்சிர் சில்வைன் இணைந்தார். 'ஜுராசிக் வேர்ல்ட் ரீபெர்த்' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் ஜூலை 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
5. 'சூப்பர் மேன்'
மார்வெல்' நிறுவனத்திற்காக 'கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜேம்ஸ் கன், தற்போது டி.சி. நிறுவனத்துக்காக புதிய 'சூப்பர் மேன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் 'சூப்பர் மேன்' கதாபாத்திரத்தில் நடிகர் டேவிட் கோரன்ஸ்வெட் நடித்துள்ளார். 'லெக்ஸ் லூதர்' என்ற வில்லனாக நிக்கோலஸ் ஹோல்ட், கதாநாயகி லூயிஸ் லேன் கதாபாத்திரத்தில் ரச்சேல் புரோஸ்நாகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை தொடர்ந்து டி.சி. நிறுவனத்திற்கு அடுத்தடுத்த சூப்பர் ஹீரோ படங்கள் வரிசையாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 'சூப்பர் மேன்' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூலை 11-ந்தேதி வெளியாக உள்ளது.
6."அவதார்: பயர் அண்ட் ஆஷ்"
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்' படத்தின் முதல் பாகம் 2009 டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்தது. படத்தில் இடம்பெற்று இருந்த பண்டோரா கற்பனை உலகம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வசூலிலும் சாதனை நிகழ்த்தி 3 ஆஸ்கார் விருதுகளை வென்றது. 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் படத்தின் இரண்டாம் பாகம் 'அவதார்: தி வே ஆப் வாட்டர்' என்ற பெயரில் தயாரானது.
சினிமா வரலாற்றில் அதிக வசூல் செய்த திரைப்படங்களின் இதுவும் ஒன்றாகும். தற்போது இதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு "அவதார்: பயர் அண்ட் ஆஷ்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கேட் வின்ஸ்லெட், கிளிப் கர்டிஸ், பிரிட்டன் டால்டன், எடி பால்கோ மற்றும் திலீப் ராவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இப்படம் டிசம்பர்19-ம் தேதி வெளியாக உள்ளது.
7. வுல்ப் மேன் - ஜனவரி 17( தியேட்டர்)
8. பேக் இன் ஆக்சன் - ஜனவரி 17 (நெட்பிளிக்ஸ்)
9. யு ஆர் கோர்டியல்லி இன்வைட்டட் - ஜனவரி 30 ( அமேசான் பிரைம் )
10. 'பிரிட்ஜெட் ஜோன்ஸ்: மேட் அபௌட் தி பாய்' - பீகாக் - பிப்ரவரி 14 (தியேட்டர்)
11. தி கோர்ஜ் - பிப்ரவரி 14 ( ஆப்பிள் டீவி)
12. 'தி லெஜண்ட் ஆப் ஓச்சி' – பிப்ரவரி 28 ( தியேட்டர்)
13. சின்னர்ஸ் - மார்ச் 7 (தியேட்டர்)
14. தி எலக்ட்ரிக் ஸ்டேட் - மார்ச் 14 (நெட்பிளிக்ஸ்)
15. ஸ்னோ வைட் - மார்ச் 21 ( தியேட்டர்)
16. எ மின்கிராப்ட் மூவி -ஏப்ரல் 4 ( தியேட்டர்)
17. மிக்கி 17 - ஏப்ரல் 18 ( தியேட்டர்)
18. தி பிக் போல்ட் பியூட்டிபுல் ஜர்னி - மே 9 ( தியேட்டர்)
19. பாலேரினா - ஜூன் 6 ( தியேட்டர்)
20. எலியோ - ஜூன் 13 ( தியேட்டர்)
21. கவ் டு டிரெய்ன் யுவர் டிராகன் - ஜூன் 13 ( தியேட்டர்)
22. எப் 1 - ஜூன் 27 ( தியேட்டர்)
23. பென்டாஸ்டிக் போர்ஸ்: தி பர்ஸ்ட் ஸ்டெப்ஸ் - ஜூலை 25 ( தியேட்டர்
24. ப்ரீக்கியர் பிரைடே - ஆகஸ்ட் 8 ( தியேட்டர்)
25. டிரான்: அரேஸ் - அக்டோபர் 10 ( தியேட்டர்)
26. தி பிளக் போன் 2 - அக்டோபர் 17 ( தியேட்டர்)
27. பிரிடேட்டர்: பேட்லேண்ட்ஸ் - நவம்பர் 7 (தியேட்டர்)
28. விக்டு பார்ட் 2 - நவம்பர் 21 ( தியேட்டர்)
29. சூட்டோபியா 2 - நவம்பர் 26 ( தியேட்டர்)
30. மார்டி சுப்ரீம் - டிசம்பர் 25 (தியேட்டர்)
31. தி கவுஸ்மெய்டு - டிசம்பர் 25 (தியேட்டர்)