'எமர்ஜென்சி' படத்தின் டிரெய்லர் வெளியானது

கங்கனா ரனாவத் இந்திரா காந்தியாக நடித்துள்ள 'எமர்ஜென்சி' படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.;

Update:2025-01-06 16:12 IST

மும்பை,

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'எமர்ஜென்சி'. இதில், இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். படத்தை அவரே இயக்கியும் உள்ளார். இப்படத்தில் அனுபம் கெர், சதீஷ் கவுசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். இப்படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. 

சமீபத்தில் 'எமர்ஜென்சி' படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்காததற்கு மும்பை உயர்நீதிமன்ற டிவிஷன் அமர்வு மத்திய தணிக்கை வாரியத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பல சிக்கல்களை தாண்டி கங்கனா ரனாவத்தின் 'எமர்ஜென்சி' படம் வருகிற 17-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ளார் . அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " 1975 எமர்ஜென்சி - இந்திய வரலாற்றை நிச்சயத்த பகுதி. இந்திரா, இந்தியாவின் வலிமையான பெண். நாட்டை உருமாற்றும் அவரின் ஆசைக்கு இடையே எமர்ஜென்சி எனும் பெருங் குழப்பத்தில் மூழ்கிவிட்டார்" எனப் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்