பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் அட்லீ?

ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கி அட்லீ பாலிவுட்டில் அறிமுகமானார்.;

Update:2024-08-04 10:37 IST

image courtecy:instagram@atlee47

சென்னை,

தமிழில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. அதனைத்தொடர்ந்து இவர் இயக்கிய 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன.

இதன் பின்னர் ஷாருக்கான் நடித்து வெளியான 'ஜவான்' படத்தை இயக்கி அட்லீ பாலிவுட்டில் அறிமுகமானார். நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் வசூலில் சாதனைப்படைத்தது.

தற்போது அட்லீ பாலிவுட்டை தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மும்பையில் அட்லீ தனது குழுவினருடன் கதையை உருவாக்கி வருவதாகவும், இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது. முன்னதாக அட்லீ, அல்லு அர்ஜுனை வைத்து தெலுங்கில் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்