ரஜினிகாந்த், ஷாருக்கான் இல்ல...அதிக ரூ.300 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகர் யார் தெரியுமா?
படங்கள் ரூ.100 கோடி, ரூ.300 கோடி வசூல் செய்தாலே பெரிய சாதனை என்ற காலம் இருந்தது.
சென்னை,
தற்போது இந்திய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 1,000 கோடி ரூபாய் வசூல் செய்து புதிய சாதனை படைத்து வருகின்றன. ஆனால், படங்கள் ரூ.100 கோடி, ரூ.300 கோடி வசூல் செய்தாலே பெரிய விஷயம் என்ற காலம் இருந்தது. முதன் முதலில் ரூ.300 கோடி கிளப்பை அமீர் கான் தொடங்கினாலும், அவரால் அப்படிப்பட்ட படங்களை அதிகமாக கொடுக்க முடியவில்லை.
ஷாருக்கான், அக்சய் குமார், ரஜினிகாந்த், பிரபாஸ், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் யாரும் ரூ.300 கோடி வசூல் செய்த படங்களை அதிகமாக கொடுக்கவில்லை. இந்த சாதனையை வைத்திருக்கும் நடிகர், நாட்டின் பணக்காரரும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் உள்ளார். அவர் வேறு யாருமல்ல சல்மான் கான்தான்.
சல்மான்கான் 'பிவி ஹோ தோ ஐசி' படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும், அவர் நடித்த 'மைனே பியார் கியா' அந்த நேரத்தில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது.
தோல்வியுடன் தனது பயணத்தைத் தொடங்கிய நடிகர், இன்னும் முறியடிக்கப்படாத அதிக ரூ.300 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சல்மான் கானின், பாரத், சுல்தான், பஜ்ரங்கி பைஜான், டைகர் ஜிந்தா ஹை, டைகர் 3, பிரேம் ரத்தன் தன் பாயோ, ரேஸ் 3 மற்றும் கிக் உள்ளிட்ட 8 படங்கள் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளன. ஷாருக்கான் மற்றும் அமீர்கானின் தலா 6 படங்கள் ரூ.300 கோடி கிளப்பில் உள்ளன.
பிரபாஸிடம் பாகுபலி, பாகுபலி 2, சாஹோ, சாலார் மற்றும் கல்கி 2898 ஏசி உள்ளிட்ட 5 படங்களும் ரஜினிகாந்திடம், ஜெயிலர், எந்திரன், 2.0, கபாலி உள்ளிட்ட 4 படங்களும் உள்ளன.
சல்மான் கான் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'சிக்கந்தர்' படத்தில் நடிக்கிறார். ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.