ராபர்ட் டவுனி ஜுனியர் நடிக்கும் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தில் தனுஷ்?
'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மட்டுமில்லாமல் பாடகர் , தயாரிப்பாளர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டவர் தனுஷ். இவர் தமிழ் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். ரியான் கோஸ்லிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான 'தி கிரே மேன்' படத்தின் மூலம் தனுஷ் ஹாலிவுட்டில் கால் பதித்தார்.
தற்போது 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் 'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' என்ற படத்தை இயக்க உள்ளனர். இதில் ராபர்ட் டவுனி ஜுனியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில், இதில் தமிழ் நடிகரான தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
'அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே' படத்தில் தனுஷ் நடிக்க, ரூசோ பிரதர்ஸ் சார்பில் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.