மத்திய பட்ஜெட்: தமிழகத்திற்கு அறிந்தே செய்யும் அநீதி- வைரமுத்து
உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாட்டை போகிற போக்கில் மத்திய அரசு புறக்கணிக்கிறது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதேவேளை, பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் அதிக அறிவிப்புகள் இடம்பெற்றன.
இதுதொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
"ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் உரிமையும் நியாயமும் தேவையும் உள்ள தமிழ்நாடு போகிற போக்கில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இது அறிந்தே செய்யும் அநீதி. தனக்கு எதிராகக் குடைபிடித்தவனுக்கும் சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு. மழை மாண்பு தவறிவிட்டது. நிதிநிலை அறிக்கையில் குறள் ஒன்று கூறுவது எழுதாத மரபு. இவ்வாண்டு விடுபட்டுள்ளது. எழுத வேண்டிய குறள் என்ன தெரியுமா?. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை". இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.