பவதாரணியின் கடைசிப் பாடல் வெளியானது

மறைந்த பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரணியின் கடைசிப் பாடல் வெளியாகியுள்ளது.;

Update:2024-11-01 14:54 IST

சென்னை,

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், யுவன் சங்கர் ராஜாவின் சகோதரியுமான பவதாரணி கடந்த ஜனவரி 25ம் தேதி புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், அவர் இசையமைத்த 'புயலில் ஒரு தோணி' படத்தின் பாடலை யூடியூப்பில் படக்குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். கருகருவா என்ற இந்தப் பாடலை சிநேகன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி எம்.எம்.மானசி பாடியுள்ளனர்.

இயக்குநர் ஈசன் இயக்கிய இந்தப் படத்தில் புதுமுக நடிகர்கள் விஷ்ணுபிரகாஷ் மற்றும் அர்ச்சனாசிங் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் மொத்தம் இரண்டு பாடல்கள் உள்ள நிலையில், மற்றொரு பாடலை இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடியுள்ளார்.

இந்தப் படத்தின் வெற்றியை பவதாரிணிக்கும் அர்ப்பணிப்போம் என்று படத்தின் இயக்குநர் ஈசன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்