அனு இம்மானுவேல் நடிக்கும் 'பூமராங்'படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல்;

Update:2025-01-10 06:20 IST

சென்னை,

விஷாலுடன் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனு இம்மானுவேல். கடைசியாக தமிழில் கார்த்தியுடன் ஜப்பான் படத்தில் நடித்திருந்த இவர் தற்போது தெலுங்கில் பூமராங் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இவருடன் ஷிவா கந்துகுரி, வெண்ணிலா கிஷோர், ஹர்ஷா செமுடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லண்டன் கணேஷ் மற்றும் பிரவீன் ரெட்டி வூட்லா தயாரிக்கும் இப்படத்திற்கு அனுப் ரூபன்ஸ் இசையமைக்கிறார்.

திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரூ பாபு இயக்குகிறார். இதன் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்