'அவருடன் நடிப்பது எப்போதுமே எனக்கு...'- நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால்
பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் நடித்தது பற்றி பிரக்யா ஜெய்ஸ்வால் பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
தமிழில், 'விரட்டு' என்ற படத்தில் நடித்திருந்தவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள இவர், இந்தி, கன்னடத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக அகண்டா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனைத்தொடர்ந்து, பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் பிரக்யா ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார். அதன்படி, வரும் 12-ம் தேதி வெளியாக உள்ள 'டாகு மகாராஜ்' படத்தில் இவர் நடித்திருக்கிறார். இந்நிலையில், பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் நடித்தது பற்றி பிரக்யா ஜெய்ஸ்வால் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'பாலகிருஷ்ணா சார் அதிர்ஷ்டம் நிறைந்த ஒருவர். அவருடன் நடிப்பது எப்போதுமே எனக்கு அற்புதமாக இருக்கும். 'டாகு மகாராஜ்' ஒரு வித்தியாஷமான படம். அதில் எனது கதாபாத்திரத்தின் பெயர் காவேரி. ரசிகர்கள் எனது நடிப்பை ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்'என்றார்.