காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி'- படப்பிடிப்பு தொடக்கம்

இந்தியன் 3, சிக்கந்தர், கண்ணப்பா உட்பட பல பெரிய படங்களில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.;

Update:2025-01-10 12:00 IST

சென்னை,

தெலுங்கு திரைப்படமான சத்யபாமாவில் கடைசியாக நடித்திருந்த காஜல் அகர்வால், தற்போது இந்தியன் 3, சிக்கந்தர், கண்ணப்பா உட்பட பல பெரிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், மேலும் ஒரு பாலிவுட் படத்தின் படப்பிடிப்பை காஜல் துவங்கி இருக்கிறார்.

சேத்தன் டிகே இயக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி படத்தில் அடல் பிஹாரி வாஜ்பாயாக நடித்திருப்பவரும், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்திற்கு டப்பிங் பேசியவருமான ஷ்ரேயாஸ் தல்படே இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பூச்சிக்கொல்லி ஊழலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு சாகர் பி. ஷிண்டே கதை எழுதியுள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 15 -ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் பற்றிய கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்