'பாக்யம் கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும்' - ஐஸ்வர்யா ராஜேஷ்
சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். 'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவர் ,'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.
சமீபத்தில், இவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவான ஏ.ஆர்.எம் படத்திலும், கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்திலும் நடித்திருந்தார். தற்போது இவர் தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள சங்கராந்திகி வஸ்துன்னம் படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வரும் 14-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'இப்படத்தில் எனது பாக்யம் கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். இப்படியொரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம். தெலுங்கில் ஒரு பெரிய படத்தில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினேன். அந்த கனவு இதன் மூலம் நிறைவேறியது' என்றார்.