'அமரன்' : சாய் பல்லவி சம்பளத்தை விட 10 மடங்கு அதிகமாக வாங்கிய சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.;

Update:2024-11-01 10:24 IST

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து நேற்று திரையரங்கில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது.

இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அமரன் திரைப்படம் வெளியானது. தொடர்ந்து, பல்வேறு பிரபலங்களின் பாராட்டுகளை இப்படம் பெற்று வருகிறது.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவரும்நிலையில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்காக சாய்பல்லவி ரூ.3 கோடி சம்பளம் பெற்றதாகவும், சிவகார்த்திகேயன் இதற்கு 10 மடங்கு அதாவது ரூ.30 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்