கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட "ஆல் வி இமேஜின் அஸ் லைட்"
முன்பு கேன்ஸ் திரைப்பட விழாவில் 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம் வென்றது.;
சென்னை,
பாயல் கபாடியாவின் இயக்கத்தில், கோலிவுட் இளம் நாயகன் ஹிருது ஹாரூன் நடிப்பில் உருவான படம் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்". இப்படத்தில் கனி குஸ்ருதி, திவ்ய பிரபா, சாயா கடம், ஹிருது ஹாரூன், அஸீஸ் நெடுமங்காட் மற்றும் டிண்டுமால் ஜோசப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிட்டு இரண்டாவது உயரிய விருதான 'கிராண்ட் பிரிக்ஸ்' விருதை வென்றது. இதன் மூலம் 'கிராண்ட் பிரிக்ஸ்' வென்ற முதல் இந்திய இயக்குனராகி வரலாறு படைத்துள்ளார் பாயல் கபாடியா.
இந்நிலையில், "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" திரைப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 82 வது கோல்டன் குளோப் விருதுகள் விழா அடுத்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் உருவான சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பிரிவுகளில் "ஆல் வி இமேஜின் அஸ் லைட்" பரிந்துரைக்கப்பட்டுள்ளது.