பெண்கள் பாதுகாப்பு குறித்த வீடியோ பகிர்ந்த நடிகை ரித்திகா சிங்
நடிகை ரித்திகா சிங் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
தமிழில் 'இறுதிசுற்று' படத்தில் நடித்து பிரபலமானவர் ரித்திகா சிங். ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, மழைபிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'வேட்டையன்' படத்தில் இவர் நடித்திருந்தார்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து இருந்தார். அவரது சண்டை காட்சிகள் வரவேற்பை பெற்றன. ரித்திகா சிங் குத்துச்சண்டை வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வீடியோவை ரித்திகா சிங் வெளியிட்டுள்ளார்.
அதில், ''யாரேனும் உங்களை தாக்கினால் முதலில் அவரின் தாக்குதலை தடுத்து அவருடைய வயிற்றிலும், கழுத்திலும் குத்த வேண்டும். தொடர்ந்து வலது புற கழுத்திலும் குத்தினால் எதிரி செயல் இழந்து விடுவான்'' என்று குறிப்பிட்டு உள்ளார். எதிரியை ரித்திகா சிங் அடித்து வீழ்த்துவது போன்ற காட்சியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.