நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் - போஸ் வெங்கட்

நடிகர் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.

Update: 2024-10-26 18:18 GMT

சென்னை,

சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இத்திரைப்படம் வரும் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில், கங்குவா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் போஸ் வெங்கட், நடிகர் சூர்யா அரசியலுக்கு வரவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போஸ் வெங்கட் கூறியதாவது, ஒரு சூப்பர் ஸ்டார், ரசிகரை உங்களைப்போல் வழிநடத்த வேண்டும். தர்மம் செய்ய, உதவி செய்ய இப்போதே சொல்லி கொடுத்திட வேண்டும். அதற்கும்மேல் அறிவையும், படிப்படையும் கொடுக்க வேண்டும். பின்புதான் அரசியலுக்கு வர வேண்டும். ஒரு தலைவன் என்ன வேலை செய்ய வேண்டும் என்பது முக்கியமில்லை. தலைவன் நடிகனாக, பேச்சாளராக, எழுத்தாளராக இருக்கலாம். ஆனால், தலைவனின் அடித்தளம் என்பது அவனது ரசிகர்களை முட்டாளாக வைத்திருப்பது அல்ல அவர்களை அறிவாளியாக வைத்திருப்பது. அவர்களின் அறிவை வளர்த்த பின் அரசியலுக்கு வர வேண்டும். அப்படிப்பார்த்தால் நீங்கள் (சூர்யா) அரசியலுக்கு வர வேண்டும். கமல் சாருக்கு பிறகு நுணுக்கமான உங்களை போன்ற நடிகரை பார்க்க முடியாது. இன்னும் நிறைய படங்கள் கொடுத்த பிறகு நீங்கள் (நீங்கள்) அரசியலுக்கு வர வேண்டும்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்