விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் ? படக்குழு அறிவிப்பு
விடாமுயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது
சென்னை,
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் 'விடாமுயற்சி' வெளியாகிறது.இந்நிலையில், நடிகர் அஜித்குமாரின் 'விடாமுயற்சி' படத்தின் டீசர் கடந்த மாதம் 28-ந் தேதிவெளியானது.
ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வருகிற 27-ந் தேதி வெளியாகும் என மதியம் 1 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .
Wishing everyone a Merry Christmas ✨ from team VIDAAMUYARCHI The 1st single #Sawadeeka ❤️ is releasing this Friday, 27th Dec at 1PM Straight from our heart to your playlist! #Vidaamuyarchi #EffortsNeverFail#AjithKumar #MagizhThirumeni @LycaProductions #Subaskaran… pic.twitter.com/v4lUrw9X8W
— Lyca Productions (@LycaProductions) December 25, 2024