தனுஷுக்கு சினிமா மீது காதல் - சமுத்திரக்கனி

தனுஷ் இயக்கி நடித்து வரும் 'இட்லி கடை' படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Update: 2024-12-25 13:15 GMT

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குனவராக வலம் வருகிறார். இவரது இயக்கத்தில் உருவான முதல் படம் ராஜ்கிரன் நடித்த பவர் பாண்டி. இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அததை தொடர்ந்து 'ராயன்' படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்து. அதனை தொடர்ந்து 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

தற்போது 4-வதாக 'இட்லி கடை' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சமுத்திரக்கனி,ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தனுஷ் பற்றி பேசியுள்ளார். அதாவது, தம்பி தனுஷ் ராயன் படம் வெளியான அடுத்த இரண்டாவது நாளில் என்னை அழைத்து, 'அண்ணே ரெடியா இருங்க. 10 நாளில் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கு போறோம். கால்ஷீட் கொடுத்துடுங்க' என்று சொன்னார். உடனடியாக அடுத்த படமான இட்லி கடை படத்தின் கதையை என்னிடம் சொன்னார். அதனை தொடர்ந்து அடுத்த 10-வது நாளில் தேனியில் படப்பிடிப்பில் இருந்தோம். இதெல்லாம் தனுஷுக்கு சினிமாவின் மீதான காதல் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்