திருப்பதியில் முடி காணிக்கை செலுத்திய நடிகர் சிவராஜ்குமார்

திருப்பதியில் நடிகர் சிவராஜ்குமாரும் அவரது மனைவி கீதாவும் முடி காணிக்கை செலுத்தினர்.

Update: 2024-12-10 02:05 GMT

திருப்பதி,

மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிவராஜ் குமார் கன்னடம் மட்டுமின்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தமிழில் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த சூழலில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, டாக்டர்களின் அறிவுரைப்படி அவர் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. ஆனால், இதனை சிவராஜ்குமார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், சிவராஜ்குமார் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு அவரும், அவரது மனைவி கீதா சிவராஜ்குமாரும் முடி காணிக்கை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்