புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் புதிய... ... வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் - பட்ஜெட்டில் அறிவிப்பு

புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம்

புதிய வருமான வரி விதிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம்:-

புதிய வருமான வரி விதிப்பு முறையில் நிலையான கழிவு (Standard Deduction) 50 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில் அது 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை:

புதிய வருமான வரி விதிப்பு முறையில் தனிநபர் ஆண்டு வருமானம் 3 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது.

ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இருந்தால் 5 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 5 சதவீத வரி விதிக்கப்பட்ட நிலையில் தற்போது உச்ச வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை

ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருந்தால் 10 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.6 லட்ச ரூபாய் முதல் ரூ.9 லட்சம் வரை ஆண்டு வருமானம் இருந்தால் 10 சதவீத வரி விதிக்கபப்ட்டது. ஆனால், தற்போது ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக இருந்தால் 10 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் வரை

ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால் 15 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ரூ.9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆண்டு வருமான வரி 15 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது அதில் சிறு மாற்றம் செய்யப்பட்டு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை இருந்தால் 15 சதவீத வருமான வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ரூ.15 லட்சம் வரை

ஆண்டு வருமானம் ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இருந்தால் 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் இதே நிலையே நீடித்து வந்தது.

ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல்

ஆண்டு வருமானம் ரூ.15 லட்சத்திற்கு மேல் இருந்தால் 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாகவும் இதே நிலையே நீடித்து வந்தது.

Update: 2024-07-23 08:11 GMT

Linked news