அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன்... ... 10ம் நாளாக தொடரும் போர்: ஹமாஸ் ஒட்டுமொத்தமாக ஒழிக்கப்படவேண்டும் - ஜோ பைடன்

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் மீண்டும் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். காசா மீது முப்படை தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில், அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஆண்டனி பிளிங்கன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறாக முடியும் என்று ஜோ பைடன் கூறியிருந்த நிலையில், ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேலுக்கு மீண்டும் சென்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த வெள்ளிக்கிழமைதான் இஸ்ரேல் பிரதமரை ஆண்டனி பிளிங்கன் சந்தித்து இருந்தார்.

Update: 2023-10-16 09:31 GMT

Linked news