'நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன்' - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநிலங்களவை சபாநாயகராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் துவக்க உரையாற்றிய பிரதமர் மோடி கூறியதாவது,

இந்த அவை மற்றும் நாட்டின் சார்பாக சபாநாயகர் ஜக்தீப் தங்கருக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கிறேன். பல்வேறு தடைகளை சந்தித்து நீங்கள் இந்த நிலையை அடைத்து உயர்ந்துகொண்டு செல்கிறீர்கள். இது நாட்டு மக்கள் சிலருக்கு உத்வேகமாக இருக்கும்.

நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன். அவர் ராணுவ பள்ளியில் பயின்றுள்ளார். ஆகையால், அவர் ராணுவ வீரர்களுடனும், விவசாயிகளுடனும் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளார்.

நாடு 75-வது சுதந்திர தினம் கொண்டாடும்போதும், ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்கும்போதும் இந்த கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

நமது ஜனாதிபதி திரவுபதி முர்மு பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்துள்ளார். அவருக்கு முன், நமது முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சமூகத்தில் நலிவடைந்த பிரிவை சேர்ந்தவர். தற்போது நமது துணை ஜனாதிபதி விவசாயி மகன். நமது துணை ஜனாதிபதிக்கு சட்டத்துறையிலும் நல்ல அறிவு உள்ளது’ என்றார்.

Update: 2022-12-07 06:19 GMT

Linked news